வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவதைத் தவிர்க்க
திருப்பூர், பிப். 10 – யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் இழப்பைச் சந்திப்பதைத் தடுக்க திருமூர்த்தி அணையில் இருந்து மேற்குப் பகுதியில் மின்வேலி அமைக்க வேண்டும் என்று விவசா யிகள் கோரியுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் விவசா யிகள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: உடுமலை வட்டம் திருமூர்த்தி அணைக்கு மேற்கே விவசாயிகள் தோட்டத்து சாலையில் குடியிருந்து விவசாயம் செய்கிறார்கள். இந்த விவசாய இடத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயி்ர்களை சேதப்படுத்தி வருகின்றன. இது விவசாயிகளின் உயிருக்கும் அச்சு றுத்தலாக இருந்து வருகிறது. மேலும் கால்நடைகளும் தாக்கப் படுகின்றன. இதனை தடுக்க அரசு அமைத்து கொடுத்த மின்வேலியும் பயனற்றுப் போய்விட்டது. இதனால் தென்னை மரங்கள், மக்காச்சோள பயிர்கள் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க திருமூர்த்தி அணை அருகே மேற்கில் இருந்து மின் வேலி அமைத்து தர வேண்டும். இதற்கு விவசாயிகள் குழு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட னர்.
தென்னம்பாளையம் சந்தை
உழவர் உழைப்பாளர் கட்சி மாநி லத் தலைவர் கு.செல்லமுத்து தலைமை யில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் தென் னம்பாளையம் தினசரி சந்தையில் இம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தங்கள் பகுதியில் விளைந்த காய்கறிகளை வேன் மற்றும் டெம்போ மூலம் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த நேரத்தில் மொத்த வியாபாரி களும் வெளியூர்களில் இருந்து வாங்கி வந்த காய்கறிகளை விற்பனை செய் கின்றனர். இதனால் இம்மாவட்ட விவசாயிகள் பெரிதும் விலை பாதிப் பிற்கு உள்ளாகின்றனர். எனவே காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விவசாயிகள் மட்டும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தென்னம்பாளையம் தின சரி சந்தையில் ஸ்மார்ட் சிட்டி பணி கள் நடைபெற்று வருவதால், போக்கு வரத்து நெருக்கடியும், இட நெருக்க டியும் ஏற்பட்டு விவசாயிகள் விற்பனை செய்வது பாதிக்கிறது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, விவசாயிகள் எந்த சிரமமும் இன்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.