tamilnadu

img

திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

உடுமலை, ஜன. 27- திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி முதலாம் மண்டல பாசனத் திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள் ளது. திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி பாசன திட்டத்தின்கீழ் திருப் பூர், கோவை மாவட்டங்களிலுள்ள  3.77 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் நான்கு மண்டலங்கலாக பிரிக்கப் பட்டு பாசன வசதி பெறுகின்றன. இதில் நான்காம் மண்டலத்தில் 94, 068 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த செப்.25ஆம் தேதி தண்ணீர் திறக் கப்பட்டு, பாசன காலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால் வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, திருமூர்த்தி அணை யில் சேமிக்கப்பட்டு வந்தது. பிஏபி முதல் மண்டல பாசனத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை யடுத்து 94,362 ஏக்கர் நிலங் களுக்கு திங்களன்று தண்ணீர் திறக்கவும், குறிப்பிட்ட இடை வெளியில்  பாசன காலத்தில் 7,600 மில்லியன் கன அடி தண்ணீர் நான்கு சுற்றுக்களாக வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் முன்னிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்திற்காக அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவரும், கால்நடை பராமரிப் புத்துறை அமைச்சருமான உடு மலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று  பிரதான கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டார். இவ்விழாவில் பொதுப்பணித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். அணையின் நீர் மட்டம் மொத்தமுள்ள 60அடியில்  தற்போது 52.46 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 655 கன அடியா கவும் உள்ளது.