கோவை, மே 7-பொள்ளாச்சி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுஉள்ள நிலையில் குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இருக்கும் வசதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டால், அது தொடர்பாக புகார்செய்தாலும் கூட நிவர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் ஆவேசமடைந்த மக்கள் சாலை மறியல்,முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி10வது வார்டுக்குட்பட்ட மக்கள் தங்கள்பகுதியில் சாலை வசதியில்லை. சாக்கடை, கால்வாய் வசதி முறையாக இல்லை. மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இருக்கும் தெருவிளக்குகளும் இரவு நேரங்களில் ஒளிர்வதில்லை என பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும்குறைகளை தீர்க்கவில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.