tamilnadu

img

காஷ்மீரில் அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள்

கோவை, ஆக.23- காஷ்மீரில் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெறு கிறது. ஊடகங்களின் குரலையும்  முடக்கி வைத்துள்ளனர். தமிழக எம்பிக்கள் காஷ்மீர் சென்று ஆய்வு செய்து உண்மை நிலையை மக்க ளுக்கு தெரிவிக்க வேண்டும் என காஷ்மீர் மக்களோடு கைகோர்ப் போம் கூட்டமைப்பினர் தெரிவித் துள்ளனர்.  கோவை பத்திரிகையாளர் மன்றத் தில் வெள்ளியன்று காஷ்மீர் மக்க ளோடு கைகோர்ப்போம் கூட்டமைப் பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர் பார்த்திபன், புரட்சிகர இளைஞர் கழக பொறுப்பாளர் பெரோஷ்பாபு, தமிழர் கழக மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் நேரு தாஸ், வி.சி.கட்சி மாவட்ட செயலாளர் குரு, சி.பி.ஐ(எம்.எல்) மாவட்ட பொறுப் பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 13 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில்,  காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை. மற்ற மாநிலங்களுக்கு மத்தியில் ஆளும் பாஜகவின் மறைமுக மிரட்டலாகவே இதை பார்க்கிறோம். காஷ்மீரில் அடக்குமுறைகள் மற்றும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடக்கிறது. அங்குள்ள தற்போதைய சூழலை ஊடங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும். குரலற்றவர்களின் குரல்  என கூறப்படும் ஊடகங்கள் கூட முடக்கபட்டு உள்ளது. அங்கு உள்ள மக்களின் நிலை குறித்து முழுமையான தகவல்கள் இல்லை. காஷ்மீர் மாநிலத் தின் நிலை குறித்து அறிய சென்ற இட சாரி தலைவர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். இது அச்ச உணர்வை ஏற்ப டுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அம்மாநிலத்தின் தலைவர் களை வீட்டு காவலில் அடைத்து வைத்திருப்பது.  தற்போது அங்கு  அமைதியான சூழல் நிலவி வருவ ாக மத்திய அரசு கூறுவது நம்பும் படியாக இல்லை. பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே மக்களிடம் கருத்து கேட்காமல் 370 சட்டம் ரத்து பயன்படுத்தப்பட்டுள் ளது. மத்திய அரசின் ஏகாதிபத்திய செயல்பாட்டை கண்டித்து ஜனநாயக வழியில் தொடர் போராட்டங்கள் நடத் தப்படும். காஷ்மீர் நிலவரம் குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு அங்குள்ள நிலை மையை தெரிவிக்க வலியுறுத்துவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.