அரசு ஊழியர்கள் ஆவேசம்
உதகை, அக்.11- அரசு ஊழியர் சங்க தலை வர்களை பழிவங்கும் தமிழக அரசின் நடவடிக்கையை கண் டித்து வெள்ளியன்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஜேக்டோ - ஜியோ போராட் டத்தை முன்னேடுத்ததற்காக அரசு ஊழியர் சங்கத்தின் முன் னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிர மணியன் பணி ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கரூர் சுப்பிர மணியம் தற்காலிக பணிநீக்கம் மற்றும் கோவை மாவட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வே.செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் முத்துராஜ், வட்ட நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன், ராமமூர்த்தி உள்ளிட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக தமிழக அரசு இடமாறுதல் செய் துள்ளது. தமிழக அரசின் இத் தகைய பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக் கோரியும், அந்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரியும் வெள்ளி யன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங் கத்தின் மாவட்ட தலைவர் கே. முத்துக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சத்துணவு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் எம். விஜயா, கருவூலக கணக்கு துறை ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் விஸ்வநாதன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கே.எச்.சலீம், கோத்த கிரி வட்ட கிளை செயலாளர் ஆர். ராஜ்குமார், அரசு ஊழியர் சங்கத் தின் பந்தலூர் வட்ட கிளை செய லாளர் பி.கோபால், குன்னூர் வட்ட கிளை துணை தலைவர் ஜே.செர்சோம், கூடலூர் வட்ட கிளை துணை தலைவர் சிவ பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில செய லாளர் சி.பரமேஸ்வரி நிறைவு செய்து பேசினார். மாவட்ட பொருளாளர் கே.ஆனந்தன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட் டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக ஆவேசமாக முழக்க மிட்டனர்.
கோவை
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணை தலை வர் சதிஷ்குமார் தலைமை தாங்கி னார். இதில் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், அரங்க நாதன், கிருஷ்ணமூர்த்தி, சிவன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பெருந்திரள் முறையீடு செய்த னர்.இதில் ஏராளமான ஊழி யர்கள் பங்கேற்று அரசின் நடவ டிக்கைக்கு எதிராக முழக்கங் களை எழுப்பினர்.