கோவை, டிச. 8 – மாணவர்களை மன அழுத்தத் திற்கு உள்ளாக்கும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்க பொள்ளாச்சி தாலுகா மாநாடு வலியுறுத்தி யுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா மாநாடு வட சித்தூர் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டை துவக் கிவைத்து சங்கத்தின் மாவட்ட தலைவர் அசார் உரையாற்றி னார். மாநாட்டை வாழ்த்தி மாண வர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கவி பாரதி ஆகியோர் உரையாற்றி னார். மாநில குழு உறுப்பினர் ஆகாஷ் மாநாட்டை நிறைவுரை யாற்றினார். முன்னதாக மாநாட்டில்பொள் ளாச்சி தாலுகாவுக்குட்பட்ட அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வச திகளை மேம்படுத்த வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியி டங்களை நிரப்ப வேண்டும். பெண் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பொள்ளாச்சியில் பாலி யல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு கடுமையான தண் டனை வழங்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் பாலியல் கல்வி முறைகளை அமல்படுத்த வேண் டும். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மாநாட்டில் பொள்ளாச்சி தாலுகா தலைவராக சந்தியா, செய லாளராக ரமேஷ் மற்றும் கண் ணன் உள்ளிட்ட பொள்ளாச்சி தாலுகாக்குழு தேர்வு செய்யப்பட் டது.