விவசாய சங்கம் கோரிக்கை
தருமபுரி, அக். 6- கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம் ஆலாபுரத்தை அடுத்து கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு விடுதலைப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆலை சுமார் 96.14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆலை 1990ஆம் ஆண்டு மே13 தேதி யன்று அன்றைய முதல்வர் மு.கருணாநிதி யால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதைய டுத்து சுமார் ரூ.33 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியன்று ஆலை தனது முதல் அரவையைத் தொடங்கியது. இந்த ஆலை 2500 மெட்ரிக் டன் கரும்பு அரவைத் திறன் கொண்டது. இந்த ஆலைக்கு அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, மொரப்பூர், சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணம், ஓமலூர், கருமந் துறை, டேனீஷ்பேட்டை ஆகிய பகுதி களில் இருந்து கரும்பு அரவைக்கு வரு கிறது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 8 மாத காலம் அரவை நடைபெறுகிறது. வருடத்தில் 5 லட்சம் டன் முதல் 6 லட்சம் டன் வரை கரும்பு அரவை நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய அரசு, சர்க்கரை சத்து 8.5 என இருந்ததை தற்போது 9.5 என அதிகரித்துள்ளது. மேலும் கரும்பு விலையை குறைத்துள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் பெருத்த நட்டத்துக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் தொடர் வறட்சியினால் கரும்பு விளைச் சலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத் தலைவர் சி.வெங்கடாச்ச லம் கூறுகையில், தொடர் வறட்சியின் காரணமாக ஆலைக்குட்பட்ட கரும்பு விவசாய சாகுபடியில் 405 ஏக்கர் நடைபெற வில்லை. கடந்தாண்டு 1லட்சத்து 40 ஆயிரம் டன் மட்டுமே அரவை நடை பெற்றது. தொடர் வறட்சியின் காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட் டது. இதனால் கரும்பு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தும் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இந்த ஆலை ஐ.எஸ்.ஓ 9001-2000 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. தமிழகத் திலேயே லாபத்தில் இயங்கும் ஆலைகளில் சுப்பரமணியசிவா சர்க்கரை ஆலையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயிகளுக்கு கரும்பு ஆலையின் லாபத்தில் பங்கு வழங்கவேண்டும். பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் அனைவ ருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4ஆயிரம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.