சேலம், ஜூலை 10- ஓய்வு பெறும் நாளன்றே பணப் பலன்களை வழங்கிட வேண் டும் என தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சேலம் மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சேலம் மண்டல 7 வது மாநாடு சேலம் மாவட்டம் ஓம லூரில் செவ்வாயன்று மண்டல தலைவர் பி.என்.பழனிவேலு தலைமையில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் கே.வேலு சங்க கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.பொன்னு சாமி, வி.அல்லிராணி, துணைச் செயலாளர் கே.ரத்தினம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உதவித்தலைவர் எஸ்.கருப்பண்ணன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநில குழு உறுப்பினர் என். கிருஷ்ணன் வரவேற்புரையாற்றி னார். மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.செல்வராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில துணை பொதுச்செயலாளர் ஆர்.தேவ ராஜ், மாநில துணைத்தலை வர் கே.கந்தசாமி, சி.பி.வாசன், மாநில துணைச்செயலாளர் கே.குப்புசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார். மண்டல செயலாளர் எஸ்.அன்பழகன், பொருளாளர் பி.அசோகன் ஆகி யோர் அறிக்கையை முன்வைத்து பேசினார்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில், அரசே பென் சனை ஏற்று நடத்திட வேண் டும். 2015 நவம்பர் முதல் பஞ் சப்படி உயர்வு, நிலுவை தொகை களை உடனே வழங்க வேண்டும். பிரதி மாதம் 1 ஆம் தேதி பென் சனை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே பணப்பலன் களை வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
மண்டல தலைவராக பி.என். பழனிவேல், மண்டல செயலாள ராக எஸ்.அன்பழகன், மண்டல பொருளாளராக பி.அழகேசன் மற்றும் பத்து துணை செயலாளர் கள், பத்து துணைத்தலைவர்கள் உள்ளிட்டு ஐம்பத்து மூன்று பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மாநில பொதுச் செயலாளர் கே.கர்சன் நிறைவுரை யாற்றினார். ஆர்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.