tamilnadu

img

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை

பெரம்பலூர், ஆக.9- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வட்டக் கிளையின் 5-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் பெரம்பலூர்- துறைமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் சம்பத் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் அகஸ்டின் தொடக்க உரையாற்றினார். வட்ட செயலாளர் கணேசன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் முத்துசாமி கொடியேற்றி வரவு செலவு அறிக்கை வாசித்தார்.  அனைத்து ஓய்வூதியச் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியச் சங்க நிர்வாகி பி.கிருஷ்னசாமி, வட்ட கிளை செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் ஜெயபால், ஆறுமுகம், சடையன், செந்தாமரை, ஆகியோர் பேசினர். தமிழ்நாடு மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் பஷீர் சிறப்புரையாற்றினார்.  இதில் மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக வட்ட துணை தலைவர்  ராமர் வரவேற்றார். வட்ட கிளை குழு உறுப்பினர் கண்ணையன் நன்றி கூறினார்.