tamilnadu

பால் விலையை உயர்த்திவிட்டு, விவசாயிகளுக்கு கொள்முதல் விலை தராத தனியார் நிறுவனங்கள்!

திருப்பூர், ஆக. 27 –  தமிழக அரசு பால்விலையை உயர்த்தி அறிவித்த உடனே நுகர் வோருக்கான பால் கட்டணத்தை உயர்த்திய தனியார் பால் நிறு வனங்கள், அதேசமயம் விவசாயி களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்காமல் உள்ள னர். தனியார் நிறுவனங்களும் அரசு அறிவித்த கொள்முதல் விலையை பால் உற்பத்தியாளர் களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர் மாவட்ட விவசாயி கள் குறை தீர் கூட்டம் செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமையில் ஆட்சி யர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் பால் விலை தொடர்பாக தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் உடுக்கம்பாளையம் பர மசிவம் பேசுகையில் கூறியதா வது: நான்காண்டு காலத்துக்குப் பிறகு பால்விலை உயர்த்தி அறி விக்கப்பட்டுள்ளது. அரசு ரூ.4 விலை உயர்வு அறிவித்தாலும் ரூ.3.50 தான் தரப்படுகிறது. 50  பைசா ஈவுத் தொகையாக பால் சங்கங்களுக்குப் பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது. ஒன்றியங் கள் தர வேண்டிய தொகையை விவசாயிகள் கொள்முதல் விலை யில் இருந்து பிடித்தம் செய்து தருவது சரியல்ல. எனவே உயர்த் தப்பட்ட ரூ.4 விலையை விவ சாயிகளுக்குத் தர வேண்டும். அத்துடன் கொழுப்பு அளவு 8.2,  4.3 என்று இருந்தால்தான் உயர்த் தப்பட்ட விலை கொடுக்கப்படு கிறது. பெரும்பாலும் அதிலும் குறைத்துக் கொடுக்கும் நிலை தான் உள்ளது. அத்துடன் அரசு அறிவித்த விலை உயர்வைத் தொடர்ந்து உடனடியாக பால் விற்பனை விலையை தனியார் நிறுவனங் கள் உயர்த்தி விட்டன. ஆனால் விவசாயிகளுக்கு தர வேண்டிய கொள்முதல் விலை உயர்வை தனியார் நிறுவனங்கள் அமல் படுத்தவில்லை. தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 25 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 32 அல்லது 33 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படு கிறது. இதுதவிர 90 லட்சம் லிட் டருக்கு மேல் தனியார் நிறுவனங் கள்தான் கொள்முதல் செய்கின் றன. எனவே தனியார் நிறுவனங் கள் அரசு அறிவித்த பால் கொள் முதல் விலை உயர்வை அமல் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார். எனினும் தனியார் நிறுவ னங்கள் பால் கொள்முதல் கட்ட ணத்தை உயர்த்தி வழங்க நட வடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. முன்னதாக பிஏபி பாசன சபை நிர்வாகி கோபால் பேசுகையில், கேரளாவில் பால் கொள்முதல் விலைக்கும், நுகர்வோருக்கு விற்கும் விலைக்கும் இடையில் நிர்வாகச் செலவினங்களுக்கான தொகை லிட்டருக்கு ரூ.7 தான் வருகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த இடைப்பட்ட செலவுத் தொகை ரூ.17 என மிக அதிகமாக உள்ளது. எனவே இந்த நிர்வாக ரீதியான செலவைக் குறைத்து பால் உற்பத்தியாளர், நுகர்வோர் இருதரப்பினரும் பயனடையும் படி செய்ய வேண்டும் என்றார். ஆனால் இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமி இடைப்பட்ட செலவுத் தொகை ரூ.17-ஐக் குறைப்பது குறித்து எதுவும் கூறாமல், மழுப்ப லாக பதிலளித்துச் சமாளித்தார்.