மார்க்சிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்
நாமக்கல், நவ.8- பெரியமணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட் டனர். நாமக்கல் மாவட்டம், பெரிய மணலி கிராமத்தில் 12 வார்டு களில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பொது மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பல்வேறு சிரமங்களை சந்தித்து வரு கின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க ஊராட்சி முழு வதும் சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு சுகாதார பணி களை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் ஜேடர்பாளை யத்தை சேர்ந்த நித்தியஸ்ரீ (6) என்ற சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரி ழந்தார். காய்ச்சலுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை கண்டித்தும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளி களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்ப டாததை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு பெரியமணலி கிளை செயலாளர் வி.தேவராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் சு.சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ், மாதர் சங்க தலைவர் டி.செல்வி மற்றும் துரைசாமி, கந்தன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதையறிந்த எலச்சிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் அல்லி முத்து, அரசு மருத்துவர் மதுமதி உள்ளிட்டோர் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இப்பேச்சு வார்த்தையில் உரிய சிகிச்சை அளிப் பதற்கான நடவடிக்கைகள் எடுப்ப தாக கூறினர். இதன்பின் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.