செங்கல்பட்டு, பிப். 12- செங்கல்பட்டு மாவட்டம் வண்ட லூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. வண்டலூர் ஊராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். சென்னைக்கு மிக அருகாமை யில் இந்த ஊராட்சி உள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த அடித்தட்டு மக்கள்,கூலித் தொழி லாளர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பயன்பெறும் வகையில் வண்டலூர் பஜனை கோவில் தெருவில் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் இயங்கும் துணை சுகா தார நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையத்திற்கு வாரம் இரண்டு முறை வரும் செவிலி யர் இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்து வழங்கி வந்தனர்.. இந்த துணை சுகாதார நிலை யத்திற்கு சொந்த இடமோ கட்டடமோ இல்லாத நிலையில் பஜனை கோவில் தெருவில் செயல்பட்டு வரும் அரசு அங்கன்வாடி மைய கட்டடத்தில் ஒரு பகுதியில் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடம் பழுதடைந்து மேற்கூறைகள் இடிந்து விழும் நிலையில் இருந்தது. பல இடங்களில் மேற்கூரை இடிந்து விழுந்து உள்புறத்தில் உள்ள கம்பிகள் தெரிந்த வண்ணம் இருந்தது. எப்போது மேற்கூரை இடிந்து விழும் என்பது தெரியாத நிலை யில் இ-மையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் அச்சத்து டனே வந்து செல்லும் நிலை இருந்தது. குறிப்பாக பணிக்கு வரும் செவிலியர் கூட அச்சத்துடனே பணி செய்து வந்தனர்.
இந்நிலையில் பழுதடைந்துள்ள துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வரும் கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்டுவதுடன் மக்கள் தொகை அதி கரித்துள்ள காரணத்தால் இந்த துணை சுகாதார மையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வண்டலூர் கிளை கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து வண்டலூர் பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கோரிக்கை மனுவினை சுகாதாரத் துறை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட, சம்பந்தப்பட்ட அலு வலர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆபத்தான நிலை யில் இருந்த துணை சுகாதார நிலைய கட்டடம் குறித்து நமது தீக்கதிரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செய்தி வெளியிட்ட பின் கட்டடம் இடிக்கப்பட்டது. மேலும் இடிக்கப்பட்ட இடத்தில் இன்று வரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து வண்டலூர் பகுதி பொதுமக்கள் மருத்துவத்திற்காக கூடுவாஞ்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வண்டலூர் பகுதியில் ஆரம்ப சுகா தார நிலையம் அமைத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடம் இந்த இடத்தில் பெயர் பலகை மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் வண்டலூர் கிளை செயலாளர் கே.பாண்டுரங்கனிடம் கேட்டபோது வளர்ந்து வரும் வண்டலூர் பகுதியில் ஏராளமான அடித்தட்டு மக்களும் கூலி தொழிலாளர்கள் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவம் வழங்கும் அரசு துணை சுகாதார மைய கட்டடம் சொந்த கட்டடத்தில் இயங்காமல் அங்கன்வாடி கட்டடத்தில் இயங்கி வந்தது. அந்த கட்டடமும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன்னர் சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்த நிலையில் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டாமல் அரசு காலம் தாழ்த்தி வருகின்றது. வண்டலூர் பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு புதியதாக ஆரம்ப சுகா தார நிலையம் அமைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி உரிய அலுவலர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுத்துள்ளோம் என்றார்.