tamilnadu

img

அவிநாசியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான அதிமுக கரை வேட்டி, சர்ட்டுகள் பறிமுதல்

அவிநாசி, ஏப். 6-அவிநாசியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான அதிமுக கரை வேட்டி, சர்ட்டுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அவிநாசியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அதிமுக வண்ணமிட்ட வேட்டி, சர்ட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். அவிநாசி அருகேயுள்ள அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈரோட்டில் இருந்து அவிநாசி நோக்கி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் அதிமுக கொடி வண்ணமிட்ட 700 வேட்டி, 500 சட்டைகள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வேட்டி, சர்ட்டுகளை பறிமுதல் செய்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல் 


இதேபோல், அவிநாசி அருகே ஈரோடுபுறவழிச்சாலையில் சனிக்கிழமை அதிகாலை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள்வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அன்னூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவில் சோதனை மேற்கொண்டனர். இதில் உரிய ஆவணங்களின்றி, கொண்டு சென்ற ரூ.2.67 லட்சம் மதிப்பிலான குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், 75 அரிசி மூட்டைகள்உள்ளிட்டவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து மேற்கொண்ட விசாரனையில் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், அரிசி மூட்டைகள்ஈரோடு, திருப்பூரில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு விநியோகம் செய்யகொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.