கோவை, மே 28- தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய் யப்பட்ட சபரிராஜனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொள்ளாச்சி மற்றும் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறித்ததாக கடந்தாண்டு பிப் ரவரி 24-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார். இதன்பின் மேற்கொண்ட விசாரணையில் பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப் பட்டுள்ளதாக பல வீடியோக்கள் வெளி யாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி உள் ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்பினர் நடத்திய பெரும் போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தற் போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் ஜாமீன்கோரி சபரி ராஜன் கோவை மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு வியாழனன்று விசார ணைக்கு வந் தது. கைது செய்யப்பட்டு ஓராண்டு கடந்தும் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங் கக்கோரி மனு தாரர் தரப்பில் வாதிடப்பட் டது.இதற்கு எதிர்ப்பு தெரி வித்த சிபிஐ தரப்பு வழக் கறிஞர், கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் என்ற அடிப்படை யில் விசாரணை நடைபெற்று வரு வதால், இப்போது ஜாமீன் வழங்கும் பட்சத் தில் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்று வாதிட்டார். இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளு படி செய்து மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெ.ராதிகா உத்தரவிட்டார்.