கோபி, நவ.1- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக் குட்பட்ட புலமேடு பகுதியில் உள்ள மண் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இச்சாலையை செப்ப னிடக் கோரி நாற்று நடும் போராட் டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட புலமேடு பகுதியில் 200க்கும் மேற் பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதிக்கு செல்ல தடப்பள்ளி கொப்பு வாய்க்கால் கரைப்பகுதியில் செல்லும் மண் சாலை மட்டுமே உள்ளது. இத னால் கடந்த பத்து ஆண்டுகளுக் கும் மேலாக தங்கள் பகுதிக்கு தார்ச்சாலை வசதிவேண்டும் என கூகலூர் பேரூராட்சி நிர்வாகத் திற்கும், பொதுப்பணித்துறைக்கும் மனு அளித்தனர். ஆனால், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பெய்துவரும் மழையினால் மண் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். மேலும் நோயாளிகளை அழைத்துச் செல்ல அவசர ஊர்தி களும் தங்கள் பகுதிக்கு வருவ தில்லை. இதேபோல், விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அவதி யுற்று வருகின்றனர்.
இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி மக்கள் மண் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றா விட்டால் பேரூ ராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் எனவும் ஆவேசமாக தெரிவித்தனர். இதே போல், தண்ணீர்பந்தல் புதூர் சாலை யிலிருந்து தடப்பள்ளி கொப்பு வாய்க்கால் வழியாகச் செல்லும் 2 கிலோமீட்டர் சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.