சாலை வசதியில்லாததால் வனப்பகுதியிலேயே பிரசவம் நடந்த அவலம்
ஈரோடு, டிச. 4- ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி அருகே உள்ள கிரா மத்தில் சாலை மற்றும் பேருந்து வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணுக்கு வனப்பகுதியிலேயே பிரசவமான அவலம் அரங்கேறி யுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியை அடுத்துள்ள வன கிராமமான கண்டப்பூர் எனும் ஊரில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த ஊரில் தார் சாலை வசதி இல்லாத நிலை யில் மண்பாதையையே பயன்ப டுத்தி வருகின்றனர். இதனால் இவ் வூருக்கு பேருந்து வசதியும் கிடை யாது. ஆகவே, தங்களுக்கு தார் சாலை,பேருந்து வசதி வேண்டி பல முறை அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், தற் போது வரை மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் இவ்வூரை சேர்ந்தவர் மாதேஷ் என்பவரின் மனைவி குமாரிக்கு திடீரென பிர சவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை யடுத்து 108 ஆம்புலன்சுக்கு தக வல் கொடுக்கப்பட்டது. ஆனால், மழையால் மண்பாதை, சேறும் சகதியாக இருந்தததால் 108 ஆம் புலன்சால் செல்ல முடியவில்லை. இதனால் மதேஷ், மனைவி குமா ரியை தொட்டில் கட்டி தூக்கிக் கொண்டு அடர்ந்த காட்டு வழியாக சென்றுள்ளார். ஆனால், இவருக்கு பிரசவ வலி அதிகமானதால் வனப் பகுதியிலேயே பிரசவம் பார்க் கப்பட்டது. சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயையும், சேயையும் சேர்த்துள்ள னர். இது குறித்து அப்பகுதி மக் கள் கூறுகையில், இது போன்ற நிலைமை இனி தொடராமல் இருக்க அரசு அதிகாரிகள் உடனடியாக தார் சாலை அமைத்து, பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.