tamilnadu

img

மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா

அவிநாசி, ஜன. 17- தமிழர் திருநாள் அவிநாசியில்  மக்கள் ஓற்றுமை  விளையாட்டு விழாவாக வியாழனன்று வாலி பர், மாதர் சங்கத்தினர் கொண்டா டினர். அவிநாசி  வடக்குக் கிளை இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து 18ஆவது மக்கள்  ஒற்றுமை விளையாட்டு விழாவை நடத்தின. இதில் பல் வேறு வகையான விளை யாட்டு போட்டிகள் நடை பெற்றன. இதைத்தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜிஸ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி, ஒன் றிய செயலாளர் எஸ்.வெங்கடா சலம், சிஜடியு நிர்வாகி  வேலுசாமி, கனகராஜ், ராமேஷ், ராஜூ, மாவட்ட செயலாளர்  மணிகண் டன், ஒன்றிய பொருளாளர் பழனி சாமி முன்னாள் கவுன்சிலர் தேவி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.  இதேபோல், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொன்ரா புரத்திலும் பொங்கல் விளை யாட்டு விழா மக்கள் ஒற்றுமை விழாவாக நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேவிகா, மோகனசுந்தரம், குமர வேல் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.