tamilnadu

img

பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கிடுக

சிஐடியு வாகன பிரச்சார இயக்கம்

தருமபுரி, நவ.20- பெண் தொழிலாளர்களுக்கு 55  வயதில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இருசக்கர வாகன பிரச்சாரம் தருமபுரி மாவட்டம் முழு வதும் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். பொருளாதார நெருக்கடியால் வேலையில் இருந்து  வெளியேற்றப்படும் தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும். விவசாயம், விவ சாயிகளையும் பாதுகாக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் நூறுநாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்  அனைத்து பிரிவு தொழிலாளர் களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ 21 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55  வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இருசக்கர வாகன பிரச் சாரம் தருமபுரி மாவட்டம் முழுவதும்  நடைபெற்றது தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற பிரச் சாரத்திற்கு  மாவட்டத் தலைவர் ஜி.நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர் சி. நாகராசன், பொருளாளர் ஏ.தெய் வானை ஆகியோர் கோரிக்கையை விளக்கிபேசினர். இதேபோல் காரிமங்கலத்தில் மாவட்ட துணைத்தலைவர் எம்.மாரிமுத்து தலைமை வகித்தார். பாலக்கோட்டில் மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி, மாவட்ட துணைச்செயலாளர் செல்வம் ஆகியோரும், பாப்பாரப்பட்டியில் போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.முரளி,  பென்னாகரத்தில் மாவட்ட துணைத்தலைவர் சி.ராஜி, இண்டூரில் மாவட்ட துணைத் தலைவர் பி.ஆறுமுகம் ஆகியோர் பேசினர். நல்லம்பள்ளியில் மாவட்ட துணைசெயலாளர் ரங்கநாதன், கடத்தூரில் மின் ஊழியர் மத்திய  அமைப்பின் மாநில துணைத் தலைவர் பி.ஜிவா, மருந்து மற்றும்  விற்பனை பிரதிநிதிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஜெயக் குமார் ஆகியோர் பேசினர். கம்பை நல்லூரில் மாவட்டதுணைசெய லாளர் பெருமாள், சாலைப் போக்கு வரத்து சங்க மாவட்டச்செயலாளர் சி.ரகுபதி ஆகியோர் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண் டனர்.