அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
தருமபுரி, பிப். 24- சம்பளம் வழங்கக்கோரி அனைத்து பிஎஸ்என்எல் அதிகா ரிகள், ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணா விரதப் போராட்டம் திங்களன்று நடைபெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்கிட வேண் டும். மாதசம்பளத்தை முறையாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களின் பத்து மாத சம்பளத்தை வழங்க வேண்டும். சம்பள பிடித் தங்களை முறையாக அமைப்புக ளுக்கு பிடித்தம் செய்ய வேண்டும். தேவையற்ற இடமாற்றங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பிஎஸ்என் எல் அதிகாரிகள், ஊழியர் சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் திங்க ளன்று பல்வேறு இடங்கிளல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி யில் மாவட்ட தொலைபேசி நிலை யம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில், மாநில உதவித்தலைவர் எம்.பாபு, மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், என்எப்டி மாவட் டச் செயலாளர் பி.மணி, எஸ்என் இஏ மாவட்டச் செயலாளர் பால முரளி, ஏஐபிஎஸ்என்எல்இஏ மாவட்டச் செயலாளர் வெங்கட்ரா கவன், பிஇடபள்யூஏ மாவட்டச் செயலாளர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை களை விளக்கி பேசினர்.
சேலம்
சேலம் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகவளாகம் மற் றும் பழைய பேருந்து நிலையம் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் தங்க ளது பணிகளை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத் திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் இ.கோபால் தலைமை வகித்தார். இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர், அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இப் போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், குன்னூ ரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவல கத்தில் திங்களன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.அந் தோணி ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜேக்கப் மோரிஸ் துவக்கி வைத்து பேசி னார். எஸ்என்இஏ தொழிற்சங்கத் தின் மாவட்ட நிர்வாகி மணிவண் ணன், தமிழ்நாடு தொலைத்தொ டர்பு ஒப்பந்த தொழிலாளர் சங் கத்தின் மாநிலச் செயலாளர் சி.வினோத், மாவட்டச் செய லாளர் எஸ்.கென்னடி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் தலைமையக வளாகத்தில் திங்களன்று உண் ணாவிரத போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு பிஎஸ் என்எல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கா.வெட்டிரங்கன் தலைமை தாங்கினார். பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் துவக்கி வைத்து உரையாற்றினார். பிஎஸ்என் எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், என் எப்டி பாலசுப்பிரமணி மற்றும் செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் உண்ணாவி ரத போராட்டத்தில் பங்கேற்றனர். முடிவில் மகேஷ்வரன் நன்றி கூறினார்.