சாலைகளில் காணப்படும் குண்டு, குழிகளை சரிசெய்ய கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கப்பல் விடும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சியில் இருந்து வரும் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்த மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல உள்ளாட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகள் பராமரிப்பில் இல்லாமல் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை, சிவானந்தபுரம் பகுதியில் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதை எதிர்த்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கப்பல் விடும் போராட்டத்தை நடத்தி உள்ளனர். இச்சாலையை பராமரிக்க கோரி இரண்டு மாதங்களுக்கு முன்னரே மாநகராட்சியில் மனுவை அளித்துள்ள நிலையில் தற்போது வரை சாலை பராமரிக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக கூறி இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இப்போரட்டமானது சிவானந்தபுரம் 1வது கிளை செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் சிவானந்தபுரம் முன்னாள் கவுன்சிலர் செல்லக்குட்டி (சிபிஎம்), வாலிபர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டி மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். .