பொள்ளாச்சி, ஜூன் 7- பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையிலிருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு ஞாயிறன்று தண் ணீர் திறக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த ஆழியாறு அணையி லிருந்து பழைய ஆயக்கட்டு பாச னத்திற்கு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலை மையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரை பயன்படுத்தி ஆனை மலை ஒன்றியத்தில் 2 போகத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய் யப்படுகிறது. ஒரு போகத்தில் மட் டுமே 6400 ஏக்கர் பாசனம் நடை பெறுகிறது. முதல் போக நெல் சாகு படிக்கு தண்ணீர் வழங்க வலியு றுத்தி விவசாய சங்கங்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இத னையடுத்து பழைய ஆயக்கட்டு பாச னத்துக்கு தண்ணீர் திறந்து விட தமி ழக முதல்வர் கே.எடப்பாடி பழனிச் சாமி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஞாயி றன்று ஜூன் 7 ஆம்தேதி முதல் அக் டோபர் 31 வரை தொடர்ந்து 146 நாட்களுக்கு ஆயிரத்து 156 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. இதனை ஆனைமலை பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெய ராமன், மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி ஆகியோர் கலந்து கொண்ட னர்.