tamilnadu

img

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

கோவை, ஆக. 5 -  நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கார ணமாக 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந் ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

\இதன் காரணமாக நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு  ஆத்துப்பாலம், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதில் போத்தனூர் ஜம்ஜம்நகர் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட லேசான உடைப்பால் வெள்ள நீர் குடியிருப் பிற்குள் புகுந்தது.

போத்தனூர் சாய்நகரில் உள்ள 10 தெருக் களுக்குள் தண்ணீர் புகுந்தது. 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலை களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதையடுத்து தகவ லறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக சரி செய்யப்படும் என தெரிவித்து அதற்காக மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.