கோபி, ஆக. 25- கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி பிரதான வாய்க்காலிலி ருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் கிளைவாய்க்காலின் மதகு உடைந் ததால் பத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பிர தான காய்வாய்க்கு கடந்த ஜூலை 14ஆம் தேதியன்று முதல்போக பாச னத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 1 லட் சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெறுகிறது.
கீழ்ப வானி பிரதான வாய்க்காலில் தற் போது விநாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், வாய்க்காலில் கரைகளை முழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கோபிசெட்டி பாளையம் அருகே செம்மாண்டம்பா ளையம் கிளைவாய்காலிலும் பாச னத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இந்த மதகில் ஏற்பட்ட பழுதி னால் மதகு உடைந்து அதிகளவு தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. இதனால், செம்மாண்டம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் கரைகளை ஒட்டியுள்ள 10க்கும் மேற்பட்ட விவ சாய நிலங்களுக்குள்ளும், அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. இத னால், அதிர்ச்சி அடைந்த அப்ப குதி விவசாயிகள் பொதுப்பணித் துறைக்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைந்த மதகினை சரிசெய்யும் முயற்ச்சியில் ஈடுபட்டு மூங்கில் மற் றும் மணல் மூட்டைகளைக் கொண்டு மதகில் உள்ள சட்டரை அடைத்து தண் ணீர் அதிகளவு வெளியேறாமல் தற்கா லிகமாக தடுத்தனர். முன்னதாக, கடந்த ஆண்டுகளில் சட்டர் பழுது ஏற்பட்டுள்ளதையும், வாய்க்கால் களை குடிமராமத்துப் பணிகள் மூலம் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தும், பொதுப்பணித் துறையினர் கண்டுகொள்ளவில்லை என்று விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.