கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாகலூர் நந்திமங்கலத்தில் ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது. செயலாளர் தேவராஜன், பொருளாளர் ராஜா ரெட்டி, கிளை செயலாளர் ஆனந்த்,மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் தேன்ககனிக்கோட்டை வட்டம் ராயக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வட்டச் செயலாளர் அனுமப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.