tamilnadu

img

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு

- விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

இளம்பிள்ளை, ஜூலை 18 – விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சங்ககிரி அருகே விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் இருகூரி லிருந்து, கர்நாடக மாநிலம் தேவன கொந்தி வரை 312 கிலோமீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் எரிவாயு குழாய் (பெட்ரோல்  பைப்லைன்) கொண்டு செல்லும் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு,  நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி ஆகிய ஏழு மாவட்டங்களிலுள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கும்.  எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலங் கள் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி,  சாலையோரமாக கொண்டு செல்ல  மத்தி,ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மோரூர், பூசகாடு, புள்ளி பாளையம், கட்டையனூர், கஸ்தூரிப் பட்டி, பொன்னாய்காடு, மூலகாட்டா னூர் ஆகிய இடங்களில் விளை நிலங் களில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.