கோமாரிநோய் தடுப்பூசி குறித்து கிராம சபை கூட்டம்
நாமக்கல், பிப். 24- நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசிப்பணி குறித்து கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது, நாமக்கல் மாவட்டத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 124 கால்நடைகளுக்கு பிப்ரவரி 28 முதல் 21 நாட்க ளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இது சம்பந்த மாக பிப்.25 ஆம் தேதியன்று (இன்று)அனைத்து கிரா மங்களிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடை பெற உள்ளது. கால்நடை வளர்ப்போர் மற்றும் விவ சாயிகளிடம் கோமாரி நோய் தடுப்பூசி பணி தொடர் பாக எடுத்துரைக்க இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று கால் நடை மருத்துவர்கள் கூறும் தேதியில், குறிப்பிட்ட இடங்களுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண் டும். கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் முன்கூட் டியே தடுப்பூசி போடப்படும் விவரம் விளம்பரப் படுத்தப்படும். இத்தடுப்பூசிப்பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வா ளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன. மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங் களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்ட விவசாய பெருமக்கள் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்ந டைகளை அழைத்துச் சென்று கோமாரிநோய் தடுப் பூசி தவறாது போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட் சியர் கேட்டு கொண்டுள்ளார்.
முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு
ஏற்காடு, பிப். 24- ஏற்காட்டில், புனித ஜோசப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 26 ஆண்டுக ளுக்கு பின்னர் சந்தித்து கொண்ட நிகழ்வு அப்பகுதி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், ஏற் காடு புனித ஜோசப் பள்ளி யில் 1994 ஆம் ஆண்டு பத் தாம் வகுப்பு படித்த மாண வர்கள் 26 ஆண்டுகளுக்கு பின்னர் ஞாயிறன்று தனி யார் தங்கும் விடுதி ஒன்றில் சந்திப்புக்கூட்டம் ஏற்பாடு செய்து, சந்தித்துக்கொண் டனர். இந்த முன்னாள் மாணவர்கள், தங்கள் முன் னாள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கி யும் கௌரவித்தனர். பின் னர் தங்கள் பழைய நினை வுகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.