சங்கு ஒலிக்க தற்காலிகத் தடை
நாமக்கல், ஆக.18- நாமக்கல் நகரில் 70 ஆண்டுகள் பழமை யான சங்கு ஒலிப்பதற்கு, நகராட்சி நிர் வாகம் தற்காலிகத் தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில், ஜவாஹர்லால் நேரு சிலை அமைந்துள்ள இடத்தில், கடந்த 1949 ஆம் ஆண்டு தன் னார்வலர்கள், அதிகாரிகளின் கூட்டு முயற்சியால், நேரத்தை அறிந்து கொள்வதற் காகவும், மக்களை துயில் எழுப்பும் வகை யிலும் மண்ணால் சுவர் எழுப்பி அதன்மீது மின் இணைப்புக் கொண்ட வெண்கலச் சங்கு நிறுவப்பட்டது. காலை 5 மணி, 8.30 மணி, நண்பகல் 12 மணி, இரவு 8.30 மணிக்கும் இந்த சங்கு ஒலிக்கும். நாமக்கல்லில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் இச் சங்கு ஒலியானது கேட்கும். கிராமப் புற மக்கள் சங்கொலியைக் கேட்டு தங்களது அன் றாடப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 1998ஆம் ஆண்டு சங்கு இருந்த மண் சுவர் இடிந்ததையடுத்து, தற்போதைய நேரு பூங்கா உள்ள பகுதியில் இரும்புக் கம்பியாலான கோபுரம் அமைக் கப்பட்டு அதில் சங்கு பொருத்தப்பட்டது. மூன்று ஆண்டுக்கு முன்பு சங்கு பழுதடைந் ததையடுத்து, 10 ஹெச்.பி. மோட்டார் பொருத்திய 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்கும் வகையிலான புதிய சங்கு பொருத் தப்பட்டது. சுதந்திரத்துக்கு பின் மக்கள் நலனுக்காக வைக்கப்பட்ட, அந்த சங்கை அகற்ற வேண்டாம் என சிலர் கூறி வந்த நிலையும், 70 ஆண்டுகளாக சங்கானது ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில், 20 தினங்களுக்கு முன்பு நகராட்சி பேருந்து நிலையப் பகுதிகளில் வசிக்கும் சிலர், நகராட்சி ஆணையர் கே.எம். சுதாவிடம், சங்கு ஒலியின் சத்தம் அதிகமாக இருப்பதாகவும், ஆரம்ப காலத்தில் நேரத்தை அறிவதற்கான சாதனங்கள் இல்லை, அதனால் இந்த சங்கு ஒலி பயனுள் ளதாக இருந்தது. தற்போது அனைத்து வகை யிலும் நேரத்தை தெரிந்து கொள்வதற்கான வசதி உள்ளது. இனிமேலும் இந்த சங்கு ஒலிக்க வேண்டுமா? அதை அகற்றி விட லாம் என மனு அளித்துள்ளனர். இதற் கிடையே, தன்னார்வலர்கள் சிலர் நாமக் கல்லின் அடையாளங்களில் இந்த சங்கும் ஒன்று. கடந்த 70 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருப்பதைத் தடை செய்யக்கூடாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மற்றொரு மனு ஆணையரிடம் அளிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ் வாறான சூழலில் தான் சில நாள்களாக சங்கு ஒலிக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. பழுத டைந்துள்ளது என காரணம் கூறப் படாலும், சிலரின் எதிர்ப்பால் தான் சங்கு ஒலிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
காபி செடிகளில் வெள்ளை தண்டு துளைப்பான் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்
ஏற்காடு, ஆக.18- ஏற்காட்டில் உள்ள காபி செடி களில் வெள்ளை தண்டு துளைப் பான் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து காபி வாரிய அதிகாரி விளக்கமளித் துள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள 67 மலைக் கிராமங்களில் 5,876 ஹெக்டேர் பரப்பில் காபி பயிரிடப்பட்டுள்ளது. இந் நிலையில் காப்பி செடிகளில் வெள்ளை தண்டு துளைப்பான் எனும் நோய் பரவும் காலம் துவங்கி யுள்ளதால், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஸ்ரீதேவி தெளிவுபடுத்தியுள்ளார். இதன்படி, “ காபி வெள்ளை தண்டு துளைப்பான் குளிர் காலம் மற்றும் கோடை காலம் என இருவிதமான பறக்கும் காலங்களை கொண் டுள்ளது. அவற்றில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான குளிர் கால பறக்கும் காலம் என்பது முக்கி யத்துவம் வாய்ந்தது. அப்போது முதிர்ந்த பூச்சிகள் வெளிவரு கின்றன. அவற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதற்கு இது உகந்த காலமாகும். கடந்த வருடம் பருவ மழையானது, முன் கூட்டியே முடிவு பெற்றதால், நீண்ட வறண்ட காலநிலை நிலவியது. இதனைத் தொடர்ந்து போதுமான அளவிற்கு பூ மழை மற்றும் பின் மழை கோடை காலத்தில் கிடைக்க பெறவில்லை. மேலும் நடப்பாண்டும் பெரு மளவு காபி விளையும் பகுதி களில் குறைந்த அளவே பருவ மழை பெய்தது. இத்தகைய நிலை யில்லாத பருவ மழை பொழிவு நடப்பு பருவத்தில் நிலவி வருவது வெள்ளை தண்டு துளைப்பானின் தாக்கத்தை அதிகப்படுத்தும். முதிர்ந்த பூச்சிகள் குறிப்பிட்ட காலத் திற்கு முன்னதாக செப்டம்பர் மாதத்திலேயே தண்டை விட்டு வெளியே வர தொடங்கும். எனவே அரேபிகா காபி விவசாயிகள் சில மேலாண்மை முறைகளை பின் பற்ற வேண்டும். ஆகஸ்டு மாத இறுதிக்குள் தண்டு துளைப்பானால் பாதிக் கப்பட்ட செடிகளை கண்டறிந்து வேறுடன் பிடுங்கி, தீயிலிட்டோ அல்லது தண்ணீருக்குள் 10 நாட்கள் மூழ்கடித்தால், தண்டு துளைப்பான் பூச்சியின் அனைத்து பருவங்களையும் கட்டுப்படுத்த லாம். வெள்ளை தண்டு துளைப் பானின் தாக்குதலுக்குள்ளான செடிகளை கண்டறிதலின் போது சில செடிகள் பூச்சியின் பாதிப்பிற் கான அறிகுறிகள் குறைந்தும், அதிக மான மகசூலுடனும் காணப்படும். அச்செடிகளின் முதன்மை வாது களை சாக்குப்பைகளை அல்லது துணிகளை ரிப்பன் போல கட்ட வேண்டும். மேலும் ஒரு பேரல் தண்ணீரில் குளேரே பைரிபாஸ் 50 ஈசி மற்றும் சைபர் மெத்ரின் 50 ஈசி ஆகியவற்றை 240 மில்லி அளவு கலந்து 200 மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு முன்னர் தெளிக்க வேண்டும். எஞ்சிய ஆரோக்கியமான செடிகளை பாது காக்க, அதன் மைய தண்டு அல்லது முதன்மை வாதுகளில் 10 சதவீத சுண்ணாம்பு கரைசலை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் பூச வேண்டும். இது ஓராண்டு வரை பூச்சியின் தாக்குதலில் இருந்து செடிகளை காக்கும். மருந்துகளை இலை மற்றும் காப்பி பழங்களின் மீது படாமல் தண்டுகளுக்கு மட்டுமே தெளிக்க வேண்டும். இயல்பான பருவமழை உள்ள பகுதிகளில் பூச்சியின் தாக்கு தலை கண்டறிதல், சுண்ணாம்பு கரைசல் பூசுதல், பூச்சி கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட வற்றை அக்டோபர் மாதம் 15ஆ ம் தேதிக்குள் செய்ய வேண்டும். கவனிப்பாரற்று கிடக்கும் செடிகள் மற்றும் நோய் தாக்குதலுக்குள்ளான செடிகளுக்கு அருகில் உள்ள செடி களை தென்னை நார் கையுறை கொண்டு பட்டை தேய்த்து விடுதல் சிறந்த வழிமுறையாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.