உடுமலை, ஜூலை 14- இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணனை மாணவர்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை வட்டம், குடிமங்கலம் பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாண வியர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த இரண்டாண்டுகளாக தமிழக அரசின் சார்பில் வழங்க வேண்டிய மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளதை பல முறை அரசு அதிகாரிகளிடம் மாண வர்கள் கூறி உள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்திய மாணவர் சங்கத் தின் தலைமையில் குடிமங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் சனியன்று மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்நிலையில் ஞாயிறன்று தற் போது இப்பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கு வதற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமி வருகை புரிந்தனர். அவர்களை இந்திய மாணவர் சங்க திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் பிரவீன் தலைமையில், குடி மங்கலம் நித்தீஷ் உள்பட மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.