tamilnadu

img

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கெடுத்துகொண்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

கோவை ஆர்எஸ்புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கெடுத்துகொண்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனையொட்டி பள்ளியின் முகப்புத்தோற்றத்தை சுத்தம் செய்து இதன் குப்பை மற்றும் மண்களை பள்ளி வளாகத்தினுள் கொட்டிவிட்டனர். இந்நிலையில் வெள்ளியன்று பெய்த மழையின் காரணமாக தண்ணீர் வெளியேற வழியின்றி பள்ளியை சூழ்ந்து கொண்டது. இதனால் பள்ளிக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.