tamilnadu

img

மேட்டுப்பாளையம் - கோவை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் கோரிக்கை

மே.பாளையம், நவ. 24- மேட்டுப்பாளையம் - கோவை இடை யேயான பயணிகள் ரயிலில் கூடுதல் பெட் டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு நான்கு முறை, கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நான்கு முறை என தினசரி எட்டு முறை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அண்மையில் நவீன வசதிகள் கொண்ட “மெமு” ரயிலாக மாற்றம் செய்யப்பட்டது. சென்னை ஐ.சி.எப் ரயில்வே தொழிற் சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலில் மொத்தம் எட்டு பெட்டிகள் உள்ளன. இதில் 614 பேர் அமர்ந்தும், 1,700 பயணிகள் வரை நின்று கொண்டும் பயணம் செய்யலாம்.  நாற்பது கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த ரயில் பயணத்தில், இருக் கைகள் குறைவு என்பதால் தினமும் நூற்றுக்கணக்கானோர் சுமார் ஒரு மணி நேரம் நின்றபடி பயணம் செய்து வருகின்ற னர். காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமென்பதால் வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகின் றனர். எனவே, இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.