உள்ளாட்சித் தேர்தல்
பென்னாகரம், டிச.15- பென்னாகரம் ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ளாட்சி மன்றத் தேர் தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சனியன்று வேட்புமனு தாக்கல் செய் தார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி களுக்கான தேர்தல் டிச.27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறு கிறது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் 1 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பொறுப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.ராதிகா சனியன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப் போது கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.இளம்பருதி, வி.மாதன், சோ.அர்ச்சுனன், வி. விசுவநாதன் மற்றும் பகுதி குழு உறுப்பினர் அன்பரசு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி
தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம் தளவாய்அள்ளி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பத விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.டி. அப்புனு, உதவி தேர்தல் அலுவலரி டம் வேட்பு மனுதாக்கல் செய்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.மல்லையன் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.