tamilnadu

அவிநாசி முக்கிய செய்திகள்

அடிப்படை வசதி கோரி இரவில் கொட்டும் மழையில் போராட்டம்

அவிநாசி, ஆக. 11- அவிநாசி அருகே பழங்கரை ரங்காநகரில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் வியாழனன்று இரவு கொட்டும் மழை யிலும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட ரங்காநகர், வைஷ்ணவி கார்டன், அய்யப்பா நகர், ருக்மா கார்டன், சாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் 2ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்பகுதியில் நீண்ட நாட்களாக தார் சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்தினர், ஊராட்சி நிர்வாகத்தினர் உள்ளிட்டோரிடமும் பலமுறை மனு  கொடுத்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பள் ளிக் குழந்தைகள் என அனைவரும் இரவு நேரங்களிலும், மழைக்காலங்க ளிலும் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.  இதற்கிடையில், வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் பழுதடைந்து, சேறும் சக தியுமாக உள்ள சாலையில் கீழே  விழுந்து காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக் கள், கொட்டும் மழையையும் பாராமல், இரவில் திடீரென அச்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட் டனர். இதுகுறித்து தகவலறிந்து  சம்பவயிடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், வெள்ளிக்கிழமை காலை உட னடியாக பழுதடைந்த சாலை தற்கா லிகமாக சீரமைக்கப்படும், தெருவிளக் குகள் பொருத்தப்படும் எனவும், விரை வில்திட்ட அறிக்கையில் அனுப்பி யுள்ளபடி, நபார்டு திட்டத்தில் தார் சாலை அமைத்துக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  ஆனால் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தெரிவித்தபடி சாலை  அமைக்கும் பணி இன்றுவரை தொடங் கவில்லை.இது பொதுமக்களிடையே அதிருப்தியை எற்படுத்தியுள்ளது.

சேவூர் அருகே ஆம்னி வேன் மோதி பெண் பலி

அவிநாசி, ஆக.11– சேவூர் அருகே போத்தம்பாளையத்தில் சனியன்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் ஒரு பெண் உயிரி ழந்தார். ஈரோடு மாவட்டம், வரப்பாளையம் அருகே ராயர் பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, இவரது மனைவி கருப்பாள் (55). இவர்களுக்கு ரங்கசாமி என்ற மகன் உள்ளார். கடந்த பல மாதங்களாக மனநிலை பாதிக் கப்பட்ட நிலையிலிருந்த கருப்பாள் சேவூர் மற்றும் போத்தம் பாளையம் பகுதியில் சுற்றி வந்தார். இந்நிலையில், சனிக் கிழமை இரவு 9 மணியளவில் போத்தம்பாளையத்தில் இவர் நடந்து செல்லும் போது திடீரென சாலையைக் கடந்ததில், சேவூரிலிருந்து கோபி நோக்கி சென்ற ஆம்னி வேன் கருப் பாள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த கருப்பாளை மீட்டு அவிநாசி அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால்  சிகிச்சை பலனிற்றி இரவு 11 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்து சேவூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.