tamilnadu

img

இடதுசாரி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

சேலம், அக்.1- சேலம் மாவட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத் திற்கு சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர்  பி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார்.  இக்கூட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், மாநிலக் குழு உறுப்பினர் பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ராமன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் விமலன், சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், எம்.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம்.எல்) மாநில குழு உறுப் பினர் வேல்முருகன், எஸ்யு சிஐ(சி) மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், மத்திய பாஜக அரசின்  மக்கள் மற்றும் தொழிலாளர் விரோத  போக்கினை கண்டித்து அக். 13, 14  ஆகிய தேதிகளில் சேலம் மாவட் டத்தில் 10 இடங்களில் பிரச்சார கூட்டங்கள் நடத்துவது என்றும், அக்.  16ஆம் தேதியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடது சாரி கட்சிகளின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.  மேலும் தாதகாப்பட்டி, அம்மாப் பேட்டை, சூரமங்கலம், அயோத்திய பட்டினம், பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தம்மம்பட்டி,  மேட்டூர், சங்ககிரி ஆகிய பகுதிகளில்  பிரச்சார இயக்கம் நடத்துவது என்று  முடிவு செய்யப்பட்டது.