tamilnadu

img

சேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவை துவக்கி வைப்பு

சேலம், அக்.15- சேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவை செவ்வாயன்று மத்திய ரயில்வே அமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.  சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று  பயணிகள் ரயில் சேவையை செவ்வா யன்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் புதுதில்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  மேலும், இந்நிகழ்வையொட்டி சேலம் கோட் டத்தில் ரயில் துவக்க நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தி பன், சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலை யில் சேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதா வது, சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை-பெங்களூரு, கோவை - மதுரைக்கு புதிய ரயில்கள் இயக்க மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தீபா வளி பண்டிகையை முன்னிட்டு, கோவை முதல் ஹௌரா வரை ஒவ் வொரு வியாழக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் கூறியுள் ளார். சேலம் ரயில் நிலையம் புதுப் பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நடைமேடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.