உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்ப வலியுறுத்தி
தருமபுரி, அக்.11- காவிரி ஆற்றின் உபரி நீரை, தருமபுரியில் உள்ள ஏரி, குளங் களில் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்து வதென மக்கள் கோரிக்கை மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டக் குழு சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு வியாழ னன்று தருமபுரியில் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலை மையில் நடைபெற்றது. இம்மா நாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, தரும புரி மாவட்டத்தில், மழைக் காலங் களில் காவிரி ஆற்றின் 20 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணா கிறது. வீணாகும் தண்ணீரில் 3 டிஎம்சி உபரி நீரை தருமபுரி மாவட் டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். அதேபோல் கே.ஆர்.பி அணையின் வலதுபுறக் கால் வாயை மொரப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் 74 சதவிகிதினர் விவசாயத்தை சார்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுகுறு விவ சாயிகள். இந்நிலையில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரு கிறது. குறிப்பாக சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டம், பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம், உயர் அழுத்த மின்கோபுரம் மற்றும் சிவாடி கிராமத்தில் பெட்ரோலியம் கிடங்கு அமைப்பது போன்ற விவசாய நிலங்களை சீரழிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மாற்று பாதையில் நிறை வேற்ற வேண்டும்.
ஒகேனக்கல் நீர்மின் திட் டத்தை செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். கர்நாடக மாநிலம் சாம் ராஜ்நகர் மாவட்டத்தில் மேக தாது என்னும் இடத்தில் இரு தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் டெல்டா மாவட்டம் மட்டும் அல்ல, காவிரி நீர் முழுவதும் கானல் நீராகிவிடும். எனவே இத்திட் டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தருமபுரி மாவட்டம் தொடங்கி அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகி யும் வேலைவாய்ப்பை உருவாக் கும் பெரும் தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை. எனவே தருமபுரியில் சிப்காட், அரூர், பென்னாகரத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். வேளாண் பொருட் களை மதிப்புகூட்டும் பொருளாக மாற்றும் வகையில் வட்டந் தோறும் வேளாண் சார்ந்த தொழிற்பேட்டை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட் டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிற்றூராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும். பேரூ ராட்சி, நகராட்சிகளுக்கும் இத் திட்டத்தை விரிவுபடுத்த வேண் டும். நூறுநாள் வேலையை 250 நாட்களாகவும், நாள் ஒன்றுக்கு ரூ.400 கூலியும் வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மேலும், இக்கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த ஆண்டு 1000 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொள்ளப்பட் டது. இந்நிலையில் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் டிசம்பர் மாதம் அனைத்து சிற் றுராட்சிகளிலும் மக்கள் சந்திப்பு இயக்கம், ஒன்றியங்களில் மனு கொடுக்கும் போராட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இம்மாநாட்டிற்கு வந்தோரை நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.இளம்பரிதி, எம்.மாரி முத்து, எம்.முத்து, இரா.சிசு பாலன், சி.நாகராசன், எம்.ஆறு முகம், வி.மாதன், கே.என்.மல்லையன், சோ.அருச்சுணன், டி.எஸ்.ராமச்சந்திரன், எஸ். கிரைஸாமேரி, வே.விசுவநாதன், இடைக்குழு செயலாளர்கள் நல்லம்பள்ளி கே.குப்புசாமி, அரூர் ஆர்.மல்லிகா, இன்டூர் பி.டி.அப்புனு, பாலக்கோடு ஜி. நக்கீரன், பாப்பிரெட்டிப்பட்டி சி. வஞ்சி, பென்னாகரம் பகுதி கே. அன்பு, மொரப்பூர் கே.தங்கராசு, பாப்பாரப்பட்டி ஆர்.சின்னசாமி, சின்னம்பள்ளி ஜி.சக்திவேல், பென்னாகரம் நகரம் எஸ்.வெள்ளிங்கிரி,ஏரியூர் முருகன், காரிமங்கலம் பி.ஜெயராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். நிறைவாக தருமபுரி ஒன்றியச்செயலாளர் என்.கந்தசாமி நன்றி கூறினார்.
தருமபுரி மாவட்ட மக்கள் கோரிக்கை மாநாட்டில், தீக்கதிர் நாளிதழுக் கான 100 ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் வழங்கினார்.