districts

img

விவசாய நிலங்களை மனைகளாக பிரித்து விற்ற பைனான்சியர் மீது நடவடிக்கை எடுத்திடுக!

மயிலாடுதுறை, மே 27 - மயிலாடுதுறையில் கோவில் நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த பைனான்ஸ் பாண்டியன் மீது  நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாது காப்பு சங்கத்தினர் பொது மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு சங்கத்தின் மாநில  அமைப்பாளர் சாமி.நடரா ஜன் தலைமையில் பெருந் திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மயிலாடுதுறை அருகே யுள்ள மாப்படுகை கிரா மத்தில் ஸ்ரீ நாராயணபுரம், அவையாம்பாள்புரம், மயூர நாதர் நகர் உள்ளிட்ட பகுதி களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இவர்கள் வசிக்கும் இந்த பகுதி பல ஆண்டு களுக்கு முன்பு மயிலாடு துறை மாயூரநாதர் கோயி லுக்கு பூஜை செய்வதற்காக தானமாக வழங்கப்பட்டது. ஆனால் இந்நிலத்தை பைனான்ஸ் பாண்டியன் என்பவர் சட்டவிரோதமாக வீட்டுமனைகளாக மாற்றி எந்த ஒரு அடிப்படை வசதி யும் செய்து தராமல் பொது மக்களிடம் விற்பனை செய்து  ஏமாற்றியுள்ளார். உடனடியாக நில மோசடி செய்த பைனான்ஸ் பாண்டியனை கைது செய்ய  வேண்டும்,  ஸ்ரீ நாராயணபுரம், மயூரநாதர்நகர், அவயாம்பாள் புரம் ஆகிய பகுதிகளில் சாலை மற்றும் மின் விளக்கு போன்ற அடிப்படை வசதி கள் செய்து தர வேண்டும் எனக் கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத் தில் ஈடுபட்டனர். மேலும் நில மோசடியில் ஈடுபட்ட பாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து கோவில் நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும் என அனைத்து சமய நிலங்களை பயன்ப டுத்துவோர் பாதுகாப்பு சங்கத் தினர் கோரிக்கை விடுத்துள் ளனர்.  விளைநிலங்களை எந்த விதமான அரசு ஒப்புதலும் இல்லாமல் மனைகளாக பிரித்து ஒரு மனை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சம் வரை விலை பேசி சுமார் 400  மனைகளை விற்பனை செய்ததோடு, சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதி களை செய்து தருவதாக ஒவ்வொரு மனைக்கும் ரூ.10  ஆயிரம் வீதம் மோசடியாக பெற்று ஏமாற்றிய பைனான்ஸ் பாண்டியன் மீது நில அப கரிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு  பதிவு செய்து கைது செய்ய வேண்டும். தங்கள் பகுதிக்கு சாலை,  மின் விளக்கு, மின்சாரம், குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், அனைத்து சமய நிலங்களை பயன்ப டுத்துவோர் பாதுகாப்பு சங்கத் தின் மாவட்ட தலைவர் த. ராயர், மாவட்ட செயலா ளர் ஏ.ஆர்.விஜய், பொருளா ளர் இயற்கை விவசாயி அ. ராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் மேகநாதன், அவையம்பாள்புரம் குடியிருப் போர் நல சங்கத்தின் தலை வர் டி.கணேசன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ராஜகோபால் (டிஎஸ்பி ஓய்வு), வழக்கறிஞர் ஆர்.வீதிவிடங்கன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட் டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்  கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் சங்கத் தின் நிர்வாகிகள் கோரிக் கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட வருவாய் அலுவ லரிடம் வழங்கினர்.