tamilnadu

img

அரசுப் பேருந்துகளில் வசூல் குறைவு: ஓட்டுனர், நடத்துனருக்கு குற்ற குறிப்பாணை

சேலம் போக்குவரத்து கோட்ட நிர்வாகத்தின் அடாவடி

சேலம், மார்ச்18- அரசு பேருந்துகளில் வசூல் குறைவால் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு குற்ற குறிப் பாணையை  அளித்தது சேலம் போக்கு வரத்து கோட்ட நிர்வாகத்தின் செயல்  ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந் தாளிப்பை ஏற்படுத்தியது.  சேலம் போக்குவரத்து கோட்டத் திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2,041 பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நோக்கில் பூங்கா, வணிக வளாகங்கள், தியோட்டர்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.  இந் நிலையில்  அரசுப் பேருந்துகளில் பொது மக்கள்பயணம் மேற்கொள்ளுவதை   தவிர்த்து வருகின்றனர். இதனால் அரசு பேருந்துகளில் போதிய பயணிகள் வருகை  குறைந்ததால் வசூலும் குறைவாக காணப் படுகிறது. இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 14ஆம் தேதியன்று 8  பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் களுக்கு வசூல் குறைவு என்று  கூறி நிர்வாகம் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கி யுள்ளது.  எனவே, போக்குவரத்து தொழிலாளர் களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த கூடிய  வகையில், தமிழக முதல்வர் அறிவிப்பை மதிக்காமல் குறிப்பாணை வழங்கிய பயணச் சீட்டு பரிசோதகர் மற்றும் பரிசோதனை அறிக்கை வழங்க உத்தரவிட்ட சேலம் புதிய பேருந்து நிலைய அதிகாரிகள் ஆகி யோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.