தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி வாய்ப்பு மற்றும் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசனிடம் 434 மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றியச் செயலாளர் ராஜா, முருகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.எஸ். ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.ஐயராமன் ஆகி யோர் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.