tamilnadu

தருமபுரி மாவட்ட மூத்த தலைவரான வி.வேடியம்மாள் காலமானார்

தருமபுரி, ஆக.17- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மூத்த தலைவரான வி.வேடியம்மாள் திங்களன்று காலமானார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தோழரும், சிஐடியு தருமபுரி மாவட்ட துணைத் தலைவரான  ஜி.வெங்கட்ராமனின் மனைவியுமான வி.வேடியம்மாள் (64) திங்களன்று காலமானார்.

இவரின் மறைவை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஏ.குமார், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் நா.நஞ்சப்பன், மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன் மற்றும் சிஐடியு, ஏஐடியுசி நிர் வாகிகள் உட்பட ஏராளமானோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, மாநிலப் பொருளாளர் ஆறுமுகம், மாநிலச் செயற்குழு உறுப் பினர் நா.பெரியசாமி ஆகியோர் தொலைபேசி வாயிலாக அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.