tamilnadu

img

தருமபுரி மாவட்டத்தில் காவலர் பணி தேர்வு

தருமபுரி, ஆக.25 - இரண்டாம் நிலை காவலர் பணியிடத்துக்கான எழுத்துத்  தேர்வினை ஞாயிறன்று தருமபுரி மாவட்டத்தில் 14, 723 பேர் எழுதினர்.   தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு மீட்புப் பணிகளுக்கான இரண்டாம் நிலை காவலர் பணிக்கு  ஞாயிறன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 11 மையங்களில் இந்த  தேர்வு நடை பெற்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 17, 030 பேர் விண்ணப் பித்திருந்தனர். இதில் 2, 115 பெண்கள் உள்பட 14, 723 பேர்  தேர்வு எழுதினர். இந்த எழுத்துத் தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் 2, 307 பேர் தேர்வுக்கு வரவில்லை. சேலம் சரகம் காவல்துறை துணைத்தலைவர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார். அவருடன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜன் உடனிருந்தார்.  முன்னதாக, காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு மாணவர்கள் சென்று வருவதற்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.