கோபி, மார்ச் 11- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காமராஜ் நகரில் செயல்படும் மூன்று தனியார் எண்ணெய் ஆலை களில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள காமராஜ் நகரில், ஈரோட்டைச் சேர்ந்த ஆறுமு கம் மற்றும் சண்முகம் ஆகியோருக்கு சொந்தமான கிங் வெங்கடேஸ்வரா மற்றும் பத்மாவதி ஆகிய மூன்று எண் ணெய் ஆலைகள் செயல்பட்டு வருகி றது. இந்த ஆலைகளிலிருந்து சமை யல் எண்ணெய், பாமாயில், நல் லெண்ணெய் போன்ற எண்ணெய்கள் தயாரிக்கப்பட்டு கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் உட்பட தமிழகத் தில் பல மாவட்டங்களுக்கு மொத்த விற்பனைக்கும், சில்லரை விற்ப னைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் கோவை மண்டல வருமான வரித்துறையினர் என 20க்கும் மேற் பட்ட அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர். இச்சோதனையில் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட கணக்குகள் சரிபார்க்கப்படும். என் றும், வரி ஏய்ப்பு நடத்துள்ளதாக என் பது குறித்தும் ஆய்வு மேற்கொள் ளப்படும் என்றும், வருமான வரிக் கணக்கு சரியான முறையில் உள்ளதா என்பது குறித்து சோதனை மேற் கொண்டு நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இச்சம்பம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.