ஆனைமலை, செப்.15 – குறைந்தபட்ச கூலி சட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பேரவையில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் ஆனை மலை தாலுகா இரண்டாவது பேரவைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இப்பேரவை கூட்டத்திற்கு சங்கத் தின் ஆனைமலை தாலுகா பொரு ளாளர் எம்.சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார். அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.கனகராஜ், சாலை போக்குவரத்து கழகத்தின் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் ரபீக், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ஜி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
தீர்மானங்கள்
இப்பேரவையில் சாலை போக்கு வரத்து தொழிலாளர்களுக்கான அடிப்படை பிரச்சனைகளுக்கு உட னடியாக தீர்வு காண வேண்டும். குறைந்த பட்ச கூலி சட்டத்தை அமல்படுத்த வேண்டும். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதனையடுத்து சங்கத்தின் தாலுகா தலைவராக டி.மணிகண்டன், செய லாளராக எம்.சாதிக் பாட்ஷா, பொரு ளாளராக ஆர்.புஷ்பாகரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர். முடிவில் ஆனைமலை சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் பொருளாளர் ஆர்.புஷ்பாகரன் நன்றி கூறினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.