tamilnadu

img

தனியார் நிறுவனங்களில் சட்டவிரோத ஆட்குறைப்பு, உற்பத்தி நிறுத்தி வைப்பு

மத்திய, மாநில அரசுகள் தலையிட அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

கோவை, டிச. 3 –  கோவையில் கடந்த சில மாதங்களாக பல தனியார் நிறுவனங்களில் சட்டவிரோ தமாக  லே-ஆப் ஆட்குறைப்பு, உற்பத்தி நிறுத்தி வைப்பு போன்ற தொழிலாளர்கள் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இவ்விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகள்  தலையிட வேண்டும் என அனைத்து  தொழிற்சங்க கூட்டுகுழு வலியுறுத்தியுள் ளது. கோவை மாவட்ட அனைத்து தொழிற் சங்க கூட்டுக்குழு கூட்டம் சிஐடியு மில் தொழிலாளர் சங்கத்தில் தொழிற்சங்க மூத்த  தலைவர் ஆர். பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.  இதில், எச்எம்எஸ்  சங்கத் தின் டி.எஸ். ராஜாமணி,  வீராசாமி, சிஐடியு  மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி,  எஸ். ஆறுமுகம், ஏஐடியுசி சி. தங்கவேல், எல்பிஎப் ஆனந்தன், எஸ்டிடியு ரகுபுறிஸ் தார், ஐஎன்டியுசி, ஜெ.மதியழகன்,  எம்எல் எப் ஷாஜகான், மற்றும் பாலசுப்பிரமணி யன், என்.செல்வராஜ், எம்.அருணகிரி நாதன்,  லூயிஸ் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு, கோவை மாவட்டத் தில் பல தொழில் நிறுவனங்களில் வாரத் தில் மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே  தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படுகி றது. இதனால் தொழிலாளர்கள் மிகப் பெரிய பொருளாதார பாதிப்புக்கு உள்ளா கிறார்கள். எனவே தற்காலிக வேலை இழப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக் கைகளில் ஈடுபடும் போது அந்நிறுவனங் கள் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மேற்படி நிறுவனம் சீரடையும் வரையில் அந்த தொழில்களையே நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தொழில் நெருக்கடி தீர்வு காணக்கூடிய முறையில் போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். ஒரு நம்பகமான குழுவை உருவாக்கி நிதிப் பற்றாக்குறையை போக்கவும் தொழில் நிறுவனங்கள் முழுமையாக இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், ஜனவரி 8ஆம் தேதி நடக்க வுள்ள அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்கும் வகையில் டிசம்பர் 9 ஆம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது.  டிச. 27 முதல் 31 வரை பிரச்சாரம் மேற்கொள்வது. அனைத்து தொழில் வாரி யாக கூட்டுக்குழு கூட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.