tamilnadu

img

2 மணி நேரம் பால் விற்பனை: தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

சென்னை, ஏப்.25- முழு ஊரடங்கு காலத்தில் தினசரி காலை இரண்டு மணி நேரத்துக்கு பால் விநியோகம் செய்ய அனுமதி வழங்குமாறு திருமலா, ஜெர்ஸி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு தமிழக அரசு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. பால் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், விற்பனை செய்ய கடைகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட உள்ளதால் பல இடங்களில் பால் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஊரடங்கு காலத்தில் பாதுகாப்புடனும், கட்டுப்பாடுடனும் பால் விற்பனை செய்ய அனுமதி அளிக்குமாறு தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது