tamilnadu

img

கீரணத்தம் பகுதியில் சுகாதார திருவிழா பி.ஆர்.நடராஜன் எம்.பி., துவக்கி வைத்தார்

கோவை, பிப். 29– கோவை கீரணத்தம் பகுதியில் சனி யன்று நடைபெற்ற சுகாதார திருவிழாவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் துவக்கிவைத்தார்.  தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் தடுப்பு மருந்து துறை சார்பில் கோவை சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் கீர ணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் சுகாதாரத் திருவிழா சனியன்று நடை பெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடை பெற்ற இம்முகாமை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இம்முகாமில் அரசு மருத்துவத்துறையின் கீழ் இயங்கும் ஆங்கில மருத்துவம், சித்தா உள்ளிட்ட பிரிவுகளும், பல தனியார் மருத்து வமனைகளின் மருத்துவர்களும் இடம்பெற் றனர்.  இதில், ஆண், பெண் மற்றும் குழந்தை கள் என அனைவருக்கும்  பொது நோய்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. அத்து டன் தேவைப்படுவோருக்கு ரத்தம் வகை பரிசோதனை, சிறுநீர், ரத்த அழுத்தம், ஸ்கேன், இசிஜி, கண் பரிசோதனையும் செய்யப்பட்டன. இதன்பின் சுகாதாரத் துறை தலைமை மருத்துவர் யக்னாபிரபா தலைமையிலான ஏராளமான மருத்துவர் கள், செவிலியர்கள் பங்கேற்று பொதுமக்க ளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.  முன்னதாக, இந்த துவக்க விழா நிகழ் வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட் சுமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி, கீரணத்தம் ஊராட்சி தலைவர் ராசு (எ) பழனிசாமி, உதவித் தலைவர் ஆர்.கோபால் மற்றும் உறுப்பினர்கள், அரசியல் கட்சியின் பிரமு கர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட திரளா னோர் பங்கேற்றனர். இந்த சுகாதாரத் திரு விழா முகாமில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.