கோவை, ஜூன் 6 – கோவை இருகூர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப் பட்ட உயர் மின் கோபுரத்தை பி.ஆர்.நட ராஜன் எம்.பி., மக்களின் பயன்பாட்டிற் காக துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டம், இருகூர் பேரூராட் சிக்குட்பட்ட 14,17,18 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய ஜிஎப் சாலை உள்ளது. இங்கு பழமையான கருமாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகிலேயே இருகூர் பகுதி மக்க ளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் தண்ணீர் தொட்டி உள்ளது. நூற்றுக்கணக் கான மக்கள் வசித்து வரும் இச்சாலை மாலை நேரமானால் இருளில் தவிக்கும் நிலை இருந்து வந்தது. தண்ணீர் பிடிக் கவோ, கோவிலுக்கு வருவதற்கோ பெண் கள் அச்சப்படும் சூழல் இருந்து வந்தது. ஆகவே, இப்பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யாக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அவரிடம் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை மனுவினை அளித்தனர். இதன் அவசியத்தை உணர்ந்த பி.ஆர்.நட ராஜன் எம்.பி.,யும் உடனடியாக இதற் கான நிதியை ஒதுக்கீடு செய்தும், பணி களை துரிதப்படுத்தவும் உத்தர விட்டார். தற்போது அப்பணிகள் அனைத் தும் நிறைவடைந்து மக்களின் பயன்பாட் டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதுகுறித்து இப்பகுதி பெண்கள் கூறு கையில், எந்நேரமும் இருட்டாய் கிடக்கிற இந்த பகுதி இப்போ வெளிச்சமாக இருக் கிறது என முக மலர்ச்சியோடு நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுக்கு நன்றி தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த துவக்க நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா குழு உறுப்பினர் ஸ்டாலின் குமார் தலைமை வகித்தார். இதில், திமுக இருகூர் நகர தலைவர் மணியண்ணன், காங்கிரஸ் கட்சியின் இருகூர் நகர தலை வர் கல்யாணசுந்தரம், மதிமுக சந்திரசேகர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவ ஞானம், சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி உரை யாற்றினர். நிறைவாக கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஏற் புரையாற்றினார். முடிவில்,சிபிஎம் கிளை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். இந் நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.