tamilnadu

img

கோவையில் வாலிபர் சங்க ரத்ததான முகாம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., துவக்கி வைப்பு

கோவை, ஜூன் 21 -  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கோவை அரசு மருத் துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமை கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் ஞாயிறன்று துவக்கி வைத் தார். கொரோனா தொற்று அச்சுறுத் தல் காரணமாக தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நி லையில், கோவை அரசு மருத்து வமனையில் பல்வேறு சிகிச்சைக ளுக்காகவும், விபத்து உள்ளிட்ட காரணங்களுக்காகவும் ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது.

பேரிடர் காலத்தின் அவசியத்தை உணர்ந்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பல் வேறு பகுதிகளில் தொடர்ந்து ரத்த தான முகாம்களை நடத்தி வருகி றது. இதில் ஏராளமான இளை ஞர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்து வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக வாலி பர் சங்கத்தின் கோவை கிழக்கு மற் றும் சிங்கை நகரக்குழுக்களின் சார் பில் ஞாயிறன்று ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. புலிய குளம் அந்தோனியார் கோவில் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இம்முகாமிற்கு வாலிபர் சங்க கிழக்கு நகர ஒருங்கிணைப் பாளர் சிவா தலைமை வகித்தார். சிங்கை நகரச் செயலாளர் மணி பாரதி வரவேற்புரையாற்றினார். இம்முகாமை துவக்கிவைத்து பி.ஆர்.நடராஜன் உரையாற்று கையில், இளைஞர்களின் நல னுக்காக நாடு முழுவதும் இயங்கி வரும் வாலிபர் சங்கம் ரத்தான முகாம் களை நடத்துவதிலும் முத்திரை பதித்து வருகிறது.

இதற் காகஅரசிடம் பல்வேறு விரு துகளையும், பாரட்டுக்களை யும் பெற்று வருகிறது. சாதா ரண காலத்தில் ரத்ததானம் அளிப் பது என்பதைக் காட்டிலும் பேரி டர் காலத்தில் முக்கியமாக கொரோனா அச்சுறுத்தல் காரண மாக மக்கள் வெளியே வருவ தற்கு அச்சப்பட்டுள்ள சூழலில் இத்தகைய முகாம்கள் மிக அவ சிய அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. இதனை உணர்ந்த காரணத்தினால் வாலிபர் சங்கத் தினர் கடந்த மூன்று மாத காலத் திலே மட்டும் நான்கு முகாம்களை நடத்தி ஒவ்வொரு முகாம்களிலும் நூற்றுக்கும் அதிகமான இளை ஞர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்து வருகின்றனர். இந்த சீரிய பணி தொடர வேண்டும். இதே போல் மக்களின் மீது அக்கறை யுள்ள அனைத்து அமைப்புகளும் இதுபோன்ற முகாம்களை நடத்த முன்வர வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார்.  முன்னதாக இம்முகாமை வாழ்த்தி வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஸ்டா லின் குமார், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலா ளர் யு.கே.சிவஞானம்,  வாலிபர் சங்க முன்னாள் தலைவர்கள் என்.ஜாகீர், வி.தெய்வேந்திரன், த.நாகராஜ், மற்றும் வாலிபர் சங்க ரத்ததான ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் நிர்வாகி லாரன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.