கோவை, ஜூலை 28 - கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் தொற் றாளர்களின் பாதுகாப்பு மற்றும் தொற்று பரவலை தடுத்திட தாலுகா அளவில் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை போன்ற மருத்துவ கட்டமைப்புகளை உடனடியாக உரு வாக்க வேண்டும் என கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகி றது. குறிப்பாக, கோவை மாவட்டத் தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஜூலை இறுதியில் ஆயி ரத்தை கடக்கும் என சுகாதாரத்துறை மதிப்பீட்டிருந்தாக செய்திகள் வெளி யாகி இருந்தது. ஆனால், இதற்கு நேர் மாறாக தற்போது 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த பத்து நாட்க ளுக்குள்ளாக இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில் இருந்து இத்தொற்று தீவிரமடைந் துள்ளது என்பது கண்கூடாக தெரிகி றது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட வசதி படைத்த வெகுசிலரே தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணம் பன்மடங்கு என்பது மிக முக்கியமான காரணமாகும். ஆகவே பெரும்பாலும் அரசின் சிகிச்சையை நம்பியே உள்ளனர். இந்நிலையில், இஎஸ்ஐ மருத்துவ மனை மற்றும் கொடிசியாவில் மட்டுமே தற்போது கொரோனா பாதித் தவர்களுக்கான சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த ஏற்பாடு என்பது மட்டும் போதுமானதல்ல. மேலும் எவ்வித தொடர்பு மற்ற நோய்த் தொற் றுக்கான அறிகுறி உள்ளவர்கள் பரிசோ தனை செய்ய கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கே வரவேண்டிய தேவை உள்ளது.
இதன்காரணமாக இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு ஒவ் வொரு நாளும் நூற்றுக்கும் அதிகமா னோர் பரிசோதனைக்காக காத்திருக் கும் நிலைமை உருவாகியுள்ளது. இவ்வாறு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருகின்றவர்கள் மருத்துவமனையினுள் அனுமதிக்கப்ப டாத காரணத்தினால் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கின் றனர். இதன்காரணமாக நோய்த் தொற்று பரவலாகும் ஆபத்து உள் ளது. இஎஸ்ஐ மருத்துவமனையை சுற்றி யுள்ள குடியிருப்பு பகுதிகளில் அன்றா டம் கிருமிநாசினி தெளிப்பது போன்ற நடவடிக்கைகளில் மெத்தனம் இருப்ப தாக தெரிகிறது. சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி போதிய கவனம் செலுத்துவதில்லை என்கிற குற்றச் சாட்டு மக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனை உடனடியாக கலைய வேண்டும். மேலும், கோவை இஎஸ்ஐ மருத்து வமனை மற்றும் கொடிசியாவில் மருத் துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவைக்கேற்ப இல்லாததால் பணி யில் உள்ளவர்களுக்கு ஓய்வில்லாத நிலை ஏற்படுவதாக தகவல்கள் வருகி றது. மேலும், சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையால் சுகாதார பணிக ளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. மருத் துவ பரிசோதனையில் நோய்த் தொற்று கண்டறிந்தவர்களை குறிப் பிட்ட நேரத்தில் அழைத்து வருவதற் கான ஆம்புலன்ஸ் வசதி போதுமான தாக இல்லை என்பதால் நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் பலமணிநே ரம் காத்திருப்பது சம்பந்தப்பட்ட வர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத் தும். இதேபோல், தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளில் பொருளாதார வசதி யற்ற மக்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டி யது உடனடி அவசியமாக உள்ளது.
எனவே, கொரோனா மருத்துவ பரி சோதனைகள் மற்றும் நோய்த்தொற் றாளர்களுக்கான சிகிச்சை வசதிகளை தாலுகா அளவில் மருத்துவ கட்ட மைப்பை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை குறித்து தமிழக முதல்வரின் கவனத் திற்கு கொண்டு சென்று உடனடியாக புதிய நியமனத்தை செய்வதற்கான உத்தரவை பெற வேண்டுகிறேன். இக்காலத்தில் சுகாதாரப்பணி என் பது சவாலானது என்பதையறிந்தும் உணர்வுப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளும் நிரந்தரமற்ற தூய் மைப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக அறிவிப்ப தற்கான பரிந்துரையை தமிழக அரசி டம் பெற வேண்டும். உலகையே அச்சு றுத்தும் கொரோனா தொற்று சுகாதா ரத்துறையில் வலுவாக உள்ள நமக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதுகிறேன். இத்தகைய சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள உடன டியாக இக்கோரிக்கைகளின் மீது உட னடியாக நடவடிக்கை மேற்கொண்டு நமது மக்களை பாதுகாக்குமாறு அன்பு டன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.