தருமபுரி, மே 9-பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட அமானிமல்லாபுரம் ஊராட்சி தெருக்களில் உள்ள சாக்கடை கால்வாய்களில்குப்பை மற்றும் பிளாஸ்டிக் பைகளை அகற்றாததால் கழிவுநீர் பலமாதங்களாகதேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட அமானிமல்லாபுரம் ஊராட்சி அமானிமல்லாபுரத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் கழிவு நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி கொசு உற்பத்தியாகிறது. மேலும் பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, பேதி, வைரஸ் காய்ச்சலால் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கழிவு நீர் பாதிப்பு குறித்துஅப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.