கோவை, பிப். 8- கோவையில் அதிமுக கொடிக் கம்பம் விழுந்த விபத்தில் ஒரு கால் இழந்த ராஜேஸ்வரி என்ற பெண் ணிற்கு அரசு வேலைக்கான உத்தரவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெள்ளியன்று வழங்கி னார். கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி, தமிழக முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கோவை வந்தார். அவரை வரவேற்க சாலைகளில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம் பம் விழுந்து, இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா என்ற இளம்பெண் விபத்துக்குள் ளானார். அப்போது, பின்னால் வந்த ஒரு வாகனம் அவரது உடல் மீது ஏறியது. ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற் கொண்டனர். தீவிர சிகிச்சைக்கு பின்னரும் அவரது இரண்டு கால்க ளும் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு கால் அறுவை சிகிச்சை செய் யப்பட்டு அகற்றப்பட்டது. இச்சம் பவத்திற்கு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்ட னங்களை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து இவ்விவகாரம் பெரிதாகிவிடுமோ என்கிற அச்சத் தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அரசு வேலைக்கான வாக் குறுதியை அளித்தார். இதன்தொ டர்ச்சியாக விபத்தில் பாதிக்கப் பட்ட ராஜேஸ்வரிக்கு சங்கனூர் கிராம உதவியாளர் பதவிக்கான பணி ஆணையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கு.ராசமாணி, சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.